கொள்ளிடம்,டிச.25: கொள்ளிடம் பகுதியில் நெற்பயிரில் குைலநோயை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கொள்ளிடம் வட்டாரத்தில் சுமார் 13000 எக்டேர் பரப்பில் சம்பா தாளடி நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிர்கள் தண்டு உருளும் பருவம் முதல் பூ பூக்கும் தருவாயில் உள்ளது. தற்போதுள்ள சீதோஷ்ன சூழ்நிலையின்படி இரவில் அதிக குளிரும், பகலில் மிதமான வெப்பநிலையும் தொடர்வதால் நெற்பயிர்களில் குலை நோய் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.நெற்பயிரின் இலைகள்,தண்டு,கணுப்பகுதி, கழுத்துப் பகுதி, கதிர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்நோய் தாக்குதல் காணப்படும்.
இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து, சாம்பல் நிற மையப் பகுதியுடன், காயந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவப் புள்ளிகள் காணப்படும் . பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும். தீவிரத் தாக்குதலின் போது, பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிக்கும். இந்த நோயிலிருந்து நெற்பயிரை பாதுகாக்க வயல்கள் மற்றும் வரப்புகளை களைகளின்றி பராமரிக்க வேண்டும்.நோய் எதிர்ப்பு திறன் கொண்ட நெல் இரகங்களை சாகுபடி செய்ய வேண்டும். மேலும் எளிதில் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பா மசூரி போன்ற ரகங்களை தவிர்க்காலம்.விதைநேர்த்தி செய்த விதைகளை விதைப்பதால் விதை மூலம் பரவும் இந்நோயை கட்டுப்படுத்தலாம்.
தழைச்சத்தினை பரிந்துரைக்கப்பட்ட அளவில் முன்று முறையாக பிரித்து இடவேண்டும்.நடவு வயலில் ஒரு ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் புளுரசன்ஸ் உயிர் பூஞ்சாணக் கொல்லி மருந்தினை தொழுஉரத்துடன் கலந்து இடவேண்டும். மேலும் டிரைசைக்ளோசோல், அசோக்சிஸ்ட்ரோபின், ஐசோபுரோதயலோன், காசுகாமைசின், டெபுகோனசோல் ஆகிய பூஞ்சாணக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை உரிய விகிதத்தில் 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து இந்நோயினை கட்டுப்படுத்தலம்.விவசாயிகள் இது பன்ற பயிர்பாதுபாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மகசூல் இழப்பை தவிர்க்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post கொள்ளிடம் பகுதியில் நெற்பயிரில் குைலநோயை கட்டுப்படுத்தலாம்: வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை appeared first on Dinakaran.