ஆயுதத்துடன் வாலிபர் கைது

 

மதுரை: மதுரை, ஆரப்பாளையம் கிராஸ்ரோட்டை சேர்ந்தவர் காட்வின் பர்னபாஸ்(40). இவருக்கு சொந்தமான அரிசி குடோன் சிவானந்தா சாலையில் உள்ளது. இங்கு பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமிராக்களை காட்வின் பர்னபாஸ் பொருத்தியுள்ளார். அப்பகுதியில் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டை சேர்ந்த ராஜூ என்பவரது மகன் யோகேஷ்வரன்(25) மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனை பர்னபாஸ் கண்டித்துள்ளார். அப்போது யோகேஸ்வரன் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து அவரை மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கரிமேடு போலீசார் யோகேஸ்வரனை கைது செய்ததுடன், அவரிடம் இருந்த ஆயுதத்தையும் கைப்பற்றினர்.

The post ஆயுதத்துடன் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: