திண்டுக்கல்லில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், டிச. 28: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரபோஸ், மாநில குழு உறுப்பினர் புஷ்பம் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர் பிரபாகரன் வாழ்த்துரை வழங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் வீடு கட்டும் மானிய திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் உடனடியாக நிதி வழங்க வேண்டும். பென்ஷன் ரூ.3000 வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் வேஷ்டி, சேலை, பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் தீத்தான் நன்றி கூறினார்.

The post திண்டுக்கல்லில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: