முதுகுளத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், டிச. 28: திருநெல்வேலியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரை அவதூராக பேசிய நபரை கைது செய்யக்கோரி, முதுகுளத்தூரில் ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காந்தி சிலை முதல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தேவர் சிலை வரை ஊர்வலமாக சென்று ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் ராம்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுடன் எஸ்பி சந்தீஷ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து கலைந்து சென்றனர். ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் தடையை மீறி ஊர்வலம் சென்றதாக அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட 164 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post முதுகுளத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: