சிவகங்கை, டிச.28: இளையான்குடியில் வடக்கு ஒன்றிய, பேரூர் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் நஜுமுதீன் முன்னிலை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர், முன்னாள் எம்எல்ஏ சுப.மதியரசன் தீர்மானங்களை விளக்கி பேசினார்.
மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் உதயசூரியன், சாரதி(எ) சாருஹாசன், பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராஹிம், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் சிவனேசன், ஒன்றிய பொருளாளர் முருகேசன் பாகமுகவர்கள் சுந்தரம், நீலமேகம், பாலகிருஷ்ணன், தமிழரசன், மலைச்சாமி, சேதுராமன்,
மணிமாறன், சோலைராஜ், பேரூர் நிர்வாகிகள் தௌலத், ஜெயுனுலாபுதீன், காதர், இபுராஹிம்ஷா, மணிமொழியன், ராஜவேல், நாகராஜன், ராஜ்குமார், அஜித் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளை பெற ஒன்றிய, நகர நிர்வாகிகள், கட்சியினர் பாடுபட வேண்டும். அம்பேத்கரை இழிவு செய்த ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.