கடமலைக்குண்டு பகுதியில் கழுதைப்பால் விற்பனை அமோகம்

வருசநாடு, டிச. 28: தேனி மாவட்டம், கடமலைக்குண்டு வருசநாடு தும்மக்குண்டு வாலிப்பாறை, சீலமுத்தையாபுரம், வீரசின்னம்மாள்புரம், வண்டியூர் காமராஜபுரம், முருக்கோடை போன்ற பகுதிகளில் கழுதைப்பால் அமோக விற்பனை நடந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள வீடுகளில் கழுதைப்பாலை ஆர்வமாக வாங்குகின்றனர். கழுதைப்பாலை சிறியவர்கள் முதல் பெரியவர்ககள் வரை ஆர்வமாக பருகுகின்றனர்.

இதுகுறித்து கழுதைப்பால் விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறுகையில், ‘‘ஒரு சங்கு அளவுள்ள கழுதை பால் ரூ.50 முதல் 100 வரை விற்கப்படுகிறது. பெரம்பலூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் கழுதைபால் விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர். பொதுமக்கள் கூறுகையில் ‘‘உடல் உஷ்ணம், இருமல், சளி, ஜலதோஷம், வயிற்றுப்புண் உள்ளிட்டவற்றுக்கு சிறந்த மருந்தாக கழுதைப்பால் கூறப்படுகிறது. நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கையில் கழுதைப்பால் வாங்கி குடித்து வருகிறோம்’’ என்றனர்.

The post கடமலைக்குண்டு பகுதியில் கழுதைப்பால் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Related Stories: