சிவகங்கை, டிச. 28: சிவகங்கை கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறளின் மேன்மை பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை முத்தமிழ் அறிஞர் கருணாநிதியால் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு வெள்ளி விழா டிச.23 முதல் டிச. 31ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் நான்காம் நாள் நிகழ்ச்சியாக திருக்குறளின் மேன்மை பற்றிய கருத்தரங்கம் நடந்தது.இதற்கு மாவட்ட மைய நூலகர் முத்துக்குமார் தலைமை வகித்தார்.
நூலக நண்பர்கள் திட்ட எழுத்தாளர் ஈஸ்வரன் வரவேற்றார். நூலக நண்பர்களை திட்ட முத்து கண்ணன் ‘திருக்குறள் கலைஞரின் குரலோவியம்’ என்ற தலைப்பிலும், அரசு மருத்துவக் கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ் கண்ணன் ‘இன்றைய கால சூழ்நிலையிலும் திருக்குறள் பொருந்துகிறது’ என்ற தலைப்பிலும், தமிழ் செம்மல் பகிரத நாசியப்பன் ‘திருக்குறளின் மேலான்மை சிந்தனைகள்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர். இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், குரூப் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட மைய நூலகர் கனகராஜ் நன்றி கூறினார்.
The post திருக்குறள் கருத்தரங்கம் appeared first on Dinakaran.