சிவகங்கை, டிச. 28: உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடலாமென டாக்டர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு குறித்து டாக்டர்கள் கூறியதாவது, சிறுதானியங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் நுண்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. பெருங்குடலின் செயல்பாட்டைச் சீராக்குகின்றன. உடல்நலத்திற்கு ஏதுவான கிருமிகளின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. உடல் சுறுசுறுப்பிற்குக் காரணமான செராட்டினின் உற்பத்திக்கு உதவுகின்றன.
சிறுதானியங்களில் அதிக அளவில் காணப்படும் மெக்னீசியம், தீவிர ஆஸ்துமா மற்றும் ஒற்றை தலைவலியை தடுக்கிறது. சிறுதானியப் பயன்பாட்டினால் பெண்களுக்கு பித்தப் பையில் கற்கள் வருவது தடுக்கப்படுகின்றது. அதிக அளவு நார்ச்சத்து மிகுந்த சிறுதானியங்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கின்றன. உடல் பருமன் கொண்டவர்கள் சிறுதானியங்களை பயன்படுத்தும்போது, உடல் உடை சீராகக் குறைகின்றது. எலும்பு வளர்ச்சிக்கும், சராசரி ஆரோக்கியத்திற்கும் சிறுதானியங்கள் பெரிதும் துணைபுரிகின்றன என தெரிவித்துள்ளனர்.
The post உடல் எடை சீராக குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க appeared first on Dinakaran.