அப்போது, கட்டிடத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிவராஜ், பரத்வாஜி, ஹேமந்த் ஆகியோரின் செல்போன்களை திருடிச்சென்றுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து கட்டிட பணி இன்ஜினியரான சோழவரம் அடுத்த அருமந்தை கூட்டுச்சாலையை சேர்ந்த தாமோதரன் (43) என்பவரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அவர் காவல் கட்டுப்பாட்டறைக்கு புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த சோழவரம் போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கட்டிட பணியாளர்களின் செல்போன்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post கட்டிட பணி முடிந்து இரவு தூங்கிய வடமாநில தொழிலாளர்களின் செல்போன்கள் கொள்ளை appeared first on Dinakaran.