மகளுக்கு பாலியல் தொல்லை: கொடூர தந்தை அதிரடி கைது

பெரம்பூர்: பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் 44 வயது பெண்ணுக்கு கணவர், 2 மகள்கள் உள்ளனர். கடந்த 6ம் தேதி மூத்த மகளை அழைத்துக்கொண்டு அந்த பெண் கடைக்கு சென்றுள்ளார். அப்போது இரண்டாவது மகளான 9வது படிக்கும் 16 வயது சிறுமியும் தந்தையும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது திடீரென தந்தை மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத மகள் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டுள்ளார்.

இதுபற்றி தனது தாயிடம் தெரிவித்தையடுத்து உடனடியாக அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியபோது,‘‘சிறுமியின் தந்தை, ‘தனக்கு மனநிலை சரியில்லை’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். அவர் குடிபோதைக்கு மாத்திரைகள் எடுத்து வருவதும் மனநலம் பாதிக்கப்பட்டவர் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவிட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: