ஆண்டிபட்டியில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

ஆண்டிபட்டி, டிச.25: ஆண்டிபட்டி பகுதியில் திமுக கிழக்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஆண்டிபட்டி திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கி தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து திமுக நிர்வாகிகள், திராவிட கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் பெரியாரின் படத்திற்கு மரியாதை செலுத்தினர். இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரகாஷ், திராவிட கழக மாவட்ட அமைப்பாளர் கண்ணன் உட்பட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள், திராவிட கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post ஆண்டிபட்டியில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: