உடன்குடி, டிச. 25: உடன்குடி யூனியன் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம், ஒன்றிய கூட்டரங்கில் நடந்தது. யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை வகித்து யூனியனில் மக்கள் பணி செய்வதற்கு வாய்ப்பளித்த முதல்வர், துணை முதல்வர், எம்பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்து அரசு அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்தார். யூனியன் துணை சேர்மன் மீராசிராஜூதீன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹமீது சுல்தான், சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ஊராட்சியின் செலவினங்கள் குறித்த 51 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில் யூனியன் கவுன்சிலர்கள் முருங்கை மகாராஜா, செல்வின், லெபோரின், தங்கலட்சுமி, ராமலட்சுமி, மெல்சி ஷாலினி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post உடன்குடி யூனியன் கூட்டம் appeared first on Dinakaran.