5 சவரன் நகையை பறித்து மூதாட்டி கொலை எலக்டீரிசன் கைது கடன் பிரச்னைக்கு கேட்டு தர மறுத்ததால் கொடுரம்

தண்டராம்பட்டு, டிச. 25: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை பொதுப்பணித்துறை குடியிருப்பு பகுதியில் அங்கம்மாள்(65). இவரது கணவர் ஆண்டி. இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு மகள் தனலட்சுமி, போளூர் பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகன் கார்த்திகேயன் இவர் சாத்தனூர் அணையில் பூங்கா பகுதி பணி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இரண்டாவது மகன் சரவணன் திருமணம் ஆகியதால் பெங்களூரில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி கார்த்திக் தனது அம்மா அங்கம்மாள் தங்கி இருக்கும் வீட்டில் வந்து பார்த்தபோது சமையலறை பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆம்புலன்சில் பணிபுரியும் டாக்டர் பரிசோதித்த போது அங்கம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அங்கம்மாள் இறந்ததை உறவினர்களிடம் தெரிவித்து சடலத்தை அடக்கம் செய்தனர். இந்நிலையில் கார்த்திக் மகன் முகேஷ் பாட்டி வீட்டிற்கு சென்றார். அப்போது சமையலறை பகுதியில் உள்ள கேஸ் சிலிண்டரின் பைப் அறுக்கப்பட்டுள்ளதை பார்த்து சித்தப்பா சரவணனிடம் கூறியுள்ளார். அங்கம்மாள் சாவில் சந்தேகம் அடைந்த சரவணன் கார்த்திக் ஆகியோர் சாத்தனூர் அணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சாத்தனூர் அணை போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது அந்தப் பகுதியில் செல்போன் டவர் வைத்து விசாரணையை தொடங்கினர். அதில் தனலட்சுமி மகள் கோமதியின் கணவர் பூபதியின்(எலக்டீரிசன்) செல்போன் எண் அந்த இடத்தில் பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக நேற்று பூபதியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, கடந்த 20ம் தேதி பூபதி அங்கம்மாள் பார்ப்பதற்காக வந்ததும், அங்கம்மாளிடம் வந்து எனக்கு கடன் பிரச்சனை அதிகமாக உள்ளது. அதற்காக நீங்கள் அணிந்திருக்க கூடிய நகையை எனக்கு தாருங்கள் என்று கேட்டபோது அங்கம்மாள் தர மறுத்துவிட்டதால் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது அங்கம்மாளின் கழுத்தில் இருந்து செயின் மற்றும் காது, மூக்கில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்துகொண்டு தப்பிவிட்டார். அதில் மூதாட்டி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து சங்கராபுரம் பகுதிக்கு சாத்தனூர் அணை போலீசார் பூபதியை நேற்று கைது செய்து அவர் மறைத்து வைத்திருந்த நகையை பறிமுதல் செய்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் பூபதியிடம் இருந்த 5 சவரன் தங்க நகை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post 5 சவரன் நகையை பறித்து மூதாட்டி கொலை எலக்டீரிசன் கைது கடன் பிரச்னைக்கு கேட்டு தர மறுத்ததால் கொடுரம் appeared first on Dinakaran.

Related Stories: