தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம்

தஞ்சாவூர், டிச. 30: தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க., மத்திய மாவட்ட, மாநகர வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மணவழகன் வரவேற்றார். மாநில சட்டத்துறை இணை செயலாளர் சூரியா வெற்றிக்கொண்டான் பேசினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., செல்வம், மாநகர செயலாளர் மேயர் சண்.ராமநாதன், சட்டத்திருத்தக் குழு உறுப்பினர் இறைவன், மாநில மருத்துவரணி துணை செயலாளர் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, தலைமை கழக வழக்கறிஞர் நாகை தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தி.மு.க. சட்டத்துறை சார்பில் வழக்கறிஞர் அணி 3-வது மாநில மாநாடு வரும் 18ம் தேதி சென்னையில் நடைபெறுவது குறித்தும், அந்த மாநாட்டில் மத்திய மண்டலம், மத்திய மாவட்டத்தில் இருந்து திரளானோர் பங்கேற்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில், மாவட்ட பொருளாளர் அண்ணா, மாவட்ட துணை செயலாளர் கனகவள்ளி பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் கல்லணை செல்லக்கண்ணு, முருகையன், ரமேஷ்குமார், பகுதி செயலாளர் நீலகண்டன், வல்லம் நகர செயலாளர் கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் பூங்கோதை, துணை தலைவர் பாலகிருஷ்ணன், துணை அமைப்பாளர் பாலையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் அணி மாநகர அமைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

The post தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: