தஞ்சாவூர், டிச. 29: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக முதலமைச்சருக்கு தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் மற்றும் விவசாயிகள் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் இளங்காடு என்ற கிராமத்தில் பிறந்தவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். இயற்கை முறையில் விவசாயத்தை செய்ய தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றினார். தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை நோக்கி இளைஞர்களின் பார்வைகளை திருப்பி வேளாண்மையில் புரட்சி செய்தவர். இயற்கை வேளாண் மூலம் மனிதர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளின் கழிவுகளையும் மரங்கள் மற்றும் செடி கொடிகளின் இலைகளை மக்க வைத்து அதன் மூலம் இயற்கை முறையை ஊக்கப்படு த்தினார். இயற்கை வேளாண் தந்தையாக விளங்கி இந்தியாவின் வேளாண் துறை, தமிழக வேளாண் மற்றும் உணவு துறை பல்கலைக்கழகத்திற்கு ஆலோசனைகள் வழங்கி இயற்கை வேளாண் விதைகளையும் பல்வேறு புத்தகங்கள் ஆராய்ச்சி கூட்டங்கள், மாநாடு நடத்தி மிக பெரிய இயற்கை வேளாண் முறை விவசாயத்தை கொண்டு வந்தார். எனவே இயற்கை வேளாண்மையில் சாதனை படைத்த நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது: தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.