சோமரசம் பேட்டையில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

ஜீயபுரம், டிச.30: திருச்சி அருகே சோமரசம்பேட்டை அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை ரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி தொடங்கி வைத்தார். அப்போது கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கி அரசு நலதிட்டங்கள் குறித்து பேசினார்.

முகாமில் பொதுவான பரிசோதனைகள், குழந்தைகளுக்கான நோய்கள், பெண்கள் மகப்பேறு சம்பந்தப்பட்ட நோய், இருதய நோய், காது, மூக்கு, தொண்டை பரிசோதனைகள், எலும்பு நோய், சர்க்கரை நோய் புற்றுநோய், கண் மற்றும் ரத்தம், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு மருத்துவர்களும் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கி சிகிச்சையும் அளித்தனர். மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டனர்.

இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் மணிகண்டம் வட்டார மருத்துவ அலுவலர் அமிர்தா, சோமரசம் பேட்டை மருத்துவ அலுவலர் கணபதி, மருத்துவ அலுவலர்கள் மருத்துவர்கள் தேவி காயத்திரி, வனஜா, மேற்பார்வையாளர் சந்திரசேகர், சுகாதாரஆய்வாளர்கள் கண்ணதாசன், அரவிந்தன், பிரகாஷ், சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் கற்பகம் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சோமரசம் பேட்டையில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: