ஒட்டன்சத்திரம், டிச. 21: ஒட்டன்சத்திரம் சக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக வருடாந்திர சுற்றுப்புறச்சூழல் தினத்தையொட்டி நமது நிலம் நமது எதிர்காலம் பற்றிய போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து நெகிழி பைகளை அறவே ஒழித்தல் மற்றும் மஞ்சள் பைகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி, காகிதப்பை தயாரித்தல் பற்றியும் சணல் பை, மஞ்சப்பை உபயோகத்தை பற்றியும் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியை கல்லூரியின் தாளாளர் வேம்பணன், கல்லூரி முதல்வர் தேன்மொழி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியை சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் சிவகாமி, சிவரஞ்சனி மற்றும் மாணவிகள் ஒருங்கிணைப்பு செய்தனர்.
The post சுற்றுப்புற சூழல் தின விழிப்புணர்வு appeared first on Dinakaran.