ஆற்றுமணலை கடத்திய மணல் கொள்ளையர்களை சினிமா பாணியில் ‘சேசிங்’ செய்து பிடிக்க முயன்ற போலீசார்

*முட்புதரில் சிக்கிய மினிலாரியைவிட்டு, விட்டு தப்பியோட்டம்

*விஜயநாராயணம் அருகே பரபரப்பு

நெல்லை : விஜயநாராயணம் அருகே ஆற்று மணலை கடத்திய மினிலாரியை போலீசார் துரத்தியபோது, முட்புதரில் மோதிவிட்டு மணல் கொள்ளையர்கள் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நேற்று அதிகாலையில் 2 மணியளவில் முனைஞ்சிப்பட்டி அருகே கழுவூர் பகுதியில் உள்ள கருமேனி ஆற்றில் மர்மநபர்கள் ஆற்று மணலை கொள்ளையடிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். போலீசார் வருவதை பார்த்த கொள்ளையர்கள் மினிலாரியில் ஆற்று மணலுடன் அங்கிருந்து வேகமாக சென்றனர். உடனே போலீசார் போலீசார் வாகனத்தில் அவர்களை துரத்தித் சென்றனர்.

போலீசார் சுமார் 2 கிமீ தூரம் சினிமா பணியில் மினிலாரியை விடாமல் துரத்தினர். அப்போது பதைக்கம் பகுதியில் சாலை வளைவில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி முட்புதரில் மோதி நின்றது. இதனால் மணல் கொள்ளையர்கள் மினிலாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர். இதையடுத்து போலீசார், 1 யூனிட் மணலுடன் மினிலாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விஜயநாராயணம் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆற்றுமணலை கடத்திய மணல் கொள்ளையர்களை சினிமா பாணியில் ‘சேசிங்’ செய்து பிடிக்க முயன்ற போலீசார் appeared first on Dinakaran.

Related Stories: