அதன்படி போலீசார் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவு செய்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த போது, பெண் வழக்கறிஞர் குறித்து தவறாக பேசியது தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது பாலியல் துன்புறுத்தல், பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் செயல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் என 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே கடந்த 15ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசிய வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் பெண் வழக்கறிஞர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தாக ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது திருவல்லிக்கேணி போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் புழல் சிறையில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
The post பெண் வழக்கறிஞர் பற்றி அவதூறு கருத்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது: புழல் சிறையில் உள்ளவரை கைது செய்ய திருவல்லிக்கேணி போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.