இந்நிலையில் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், கேரள விவகாரம் தொடர்பான வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தபோது மருத்துவ கழிவுகள் விவகாரத்தை தமிழ்நாடு அரசு தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டது. இதுகுறித்து விசாரித்த தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கினை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. அப்போது, கேரள புற்று நோய் மருத்துவமனை, சில தனியார் மருத்துவனைதான் மருத்துவ கழிவுகளை சட்டவிரோதமாக தமிழகத்திற்கு கொண்டு வந்து கொட்டி இருப்பதாகவும், அதன் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் மருத்துவ கழிவுகளை கொட்டப்படுவதை தடுக்க தமிழக கேரள எல்லைகளில் காவல்துறை தொடர் காண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், மருத்துவ கழிவுகளை 3 நாட்களில் கேரள அரசு பொறுப்பேற்று அகற்ற உத்தரவிட்டனர்.
The post மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசாங்கம் அகற்ற வேண்டும்: தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.