சென்னை: பொங்கல் கரும்பு கொள்முதல் தொடர்பாக விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது. அரசுக்கு கரும்பு வழங்க விவசாயிகள் இடைத்தரகர்களை அணுக வேண்டாம். வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்படும். கரும்பை தர விரும்பும் விவசாயிகள் இணைப் பதிவாளரை நேரில் அணுகலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
The post பொங்கல் கரும்பு கொள்முதல் தொடர்பாக விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவுரை..!! appeared first on Dinakaran.