போலி ஆவணங்கள் மூலம் ஒத்திக்குவிட்ட ரூ.22 லட்சம் மதிப்பிலான வீடு அபகரிப்பு?: தம்பதி மீது வழக்கு

சின்னமனூர், டிச. 20: சின்னமனூர் அருகே ஒத்திக்குவிட்ட ரூ.22 லட்சம் மதிப்புள்ள வீட்டை அபகரித்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே கன்னிசேர்வைபட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் தனது வீட்டை இதே ஊரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு கடந்த 2021ம் ஆண்டு ஒத்திக்கு விட்டார். பின் ஜெயராஜ் சென்னைக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் ஜெயக்குமாரும், அவரது மனைவி பாப்பாவும் சேர்ந்து போலியாக ஆவணம் தயாரித்து ஆள் மாறாட்டம் மூலம் கடந்த 2023ல் சின்னமனூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், பாப்பாவின் தம்பி ஜெயராஜ் பெயரில் பத்திரப்பதிவு செய்து வீட்டை அபகரித்துள்ளனர். இது சென்னையில் வசித்து வரும் ஜெயராஜூக்கு தெரியவரவே ஆன்லைனில் தேனி எஸ்பியிடம் புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில் சின்னமனூர் போலீசார் ஜெயகுமார், அவரது மனைவி பாப்பா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post போலி ஆவணங்கள் மூலம் ஒத்திக்குவிட்ட ரூ.22 லட்சம் மதிப்பிலான வீடு அபகரிப்பு?: தம்பதி மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: