ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் கலெக்டரிடம் மனு

நாகர்கோவில், டிச.20: மனித பாதுகாப்பு கழக நிறுவனர் ஜெய்மோகன் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் இயங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த மருத்துவ கல்லூரி மேம்பாட்டு பணிகள் இன்றி காணப்படுகிறது. போதிய குடிநீர் வசதி, உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்கான அடிப்படை வசதிகள் இல்லாத நிலை காணப்படுகிறது. இது தொடர்பாக புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் உள்ளது. பஞ்சகர்மா சிகிச்சை பகுதிக்கு தேவையான மருந்து மற்றும் உபகரண பொருட்கள் வாங்கி கொடுக்காததால் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கிடைக்காத நிலை உள்ளது. எல்லா விதமான நோயாளிகளுக்கும் மூன்று விதமான மருந்துகளை மட்டும் கொடுத்து அனுப்புகின்றனர்.

இது தொடர்பாக நோயாளிகள் விசாரித்தாலும் மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்கிரம் திட்டத்தின் மூலம் ரூ.90 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் சுகாதாரத்துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டும் இன்றுவரை யாருக்கும் பயன் இல்லாமல் பாழடைந்து காணப்படுகிறது. படிக்கின்ற மாணவ மாணவியர் தங்கும் விடுதிகள் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. கழிவறைகள் சுகாதாரகேடு நிறைந்துள்ளது. எனவே பொதுமக்கள் நோயாளிகளும் பயன்பெறும் வகையில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: