கயத்தாறு வட்டாரத்தில் சேதமான பயிர்கள் கணக்கெடுப்பு பணி

கோவில்பட்டி, டிச. 20: கயத்தாறு வட்டாரத்தில் மழையில் சேதமான பயிர்கள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இப்பணிகளை வேளாண்மை துணை இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (ஒன்றிய அரசு திட்டம்) அல்லிராணி, கயத்தாறு வட்டாரத்தில் திருமலாபுரம், கே.சிதம்பராபுரம், கொப்பம்பட்டி, மேலபாறைப்பட்டி, அச்சங்குளம், காமநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கும் பணியை ஆய்வு செய்தார். அப்போது வேளாண்மை அலுவலர் மணிகண்டன், துணை வேளாண்மை அலுவலர் முத்துக்குமார் காளிராஜ், உதவி வேளாண்மை அலுவலர்கள் முத்துமாரி, கற்பகம், வெங்கடேஷ் மற்றும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்து பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுப்புப் பணியினை மேற்கொண்டனர்.

The post கயத்தாறு வட்டாரத்தில் சேதமான பயிர்கள் கணக்கெடுப்பு பணி appeared first on Dinakaran.

Related Stories: