குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 133 பேருக்கு குண்டாஸ் ‘

தூத்துக்குடி, டிச. 20: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு இதுவரையில் 133 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், ரேஷன் அரிசி கடத்தல், மணல் கடத்தல், போக்சோ குற்றவாளிகள், கொலை குற்றவாளிகள் உள்ளிட்டவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி மாவட்டம் முழுவதும் கடந்த ஜனவரி முதல் தற்போது வரையில் 8 பேர் போக்சோ குற்றத்திற்காகவும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய 26 பேரும், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட காரணங்களுக்காக 99 பேரும் என 133 பேர் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

The post குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 133 பேருக்கு குண்டாஸ் ‘ appeared first on Dinakaran.

Related Stories: