அர்ஜென்டினாவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த குட்டி விமானம்: தீ விபத்தில் விமானி, துணை விமானி உடல் கருகி உயிரிழப்பு

அர்ஜென்டினா: அர்ஜென்டினாவில் விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் மோதி நொறுங்கியதில் விமானி உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். பியூனஸ் அயர்ஸ்விமான நிலையத்திலிருந்து சிறிய ரக தனியார் விமானம் ஒன்று நேற்று புறப்பட தயாரானது. உருகுவே செல்ல இருந்த இந்த விமானம் ஊடுதளத்தில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் தடுப்பு சுவரை இடித்துக்கொண்டு பாய்ந்த விமானம் சாம் பெர்னாண்டோ பகுதியில் உள்ள வீடுகளின் மீது பயங்கரமாக மோதியது.

வீடுகளின் மீது மோதிய வேகத்தில் விமானம் தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதி மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளிலிருந்து வெளியேறினர். தகவல் அறிந்து விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு விரைந்த பியூனஸ் அயர்ஸ் தீயணைப்பு துறையினர் ரசாயன நுரையை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் விமானியும், துணை விமானி ஒருவரும் உடல் கருகி உயிரிழந்தனர். விமானம் விபத்துக்கான காரணம் குறித்து அர்ஜென்டினா விமானம் போக்குவரத்துதுறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post அர்ஜென்டினாவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த குட்டி விமானம்: தீ விபத்தில் விமானி, துணை விமானி உடல் கருகி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: