கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, டிச. 19: சிவகங்கை கலெக்டர் அலுவலம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தமிழரசி வரவேற்றார். மாவட்ட செயலாளர் முத்துக்குமார் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர்கள் ஜெயபிரகாஷ், சங்கராசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ், மாநில பொதுச் செயலாளர் வாசுகி, மாநில செயலாளர் பிச்சை, மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் ரூ.3000 தொகுப்பூதியத்தில் சத்துணவு ஊழியர்கள் நியமனம் செய்வதை அரசு கைவிட வேண்டும். தமிழகமெங்கும் 70000 காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி பேசினர். மாநில துணைத் தலைவர் மிக்கேலம்மாள் நன்றியுரை கூறினார்.

The post கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: