பள்ளியில் பாலியல் தொல்லை பெண்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை, டிச. 17: பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு பெண்கள் சங்கத்தினர் மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரையை அடுத்த விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில், மாணவிக்கு தற்காலிக ஆசிரியர் தரப்பில் பாலியல் தொல்லை தரப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரது நடவடிக்கைகளுக்குஆதரவாக செயல்பட்ட தலைமை ஆசிரியர் மீது சட்டம் மற்றும் துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ேகாரி, தமிழ்நாடு பெண்கள் சங்கத்தின் மதுரை மாவட்டக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்படி மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து ெகாண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

The post பள்ளியில் பாலியல் தொல்லை பெண்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: