அவை அத்தனையும் பொய். வெறும் வாய்ஜாலங்கள். பட்டியல் சாதி, பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கவும், கல்வி முதல் வேலைவாய்ப்பு வரையிலான பிரச்னைகளை சரி செய்யவும், ஜமீன்தாரி முறையை ஒழிக்கவும் தான் முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. ஜனசங்க நிறுவனர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜி உள்ளிட்ட அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்களால் இது செய்யப்பட்டது. ஆனால் அரசிலமைப்பு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து மேற்கோள் காட்டி மக்களை தவறாக வழிநடத்துவது தவறு. இடஒதுக்கீடு தொடர்பான மெட்ராஸ் மாகாணத்தின் முடிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால், இப்பிரச்னைக்கு அரசிலமைப்பை திருத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என சர்தார் வல்லபாய் படேல் பரிந்துரைத்தார்.
அதன்பேரில் தான் 1950ல் நேரு அரசிலமைப்பை திருத்துவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். ஆனால் பிரதமர் மோடி தனது உரையில் உண்மைகளை திரித்து நேரு மீது அவதூறு பரப்புகிறார். இதற்காக அவர்கள் இந்த தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பிரதமர் மோடி கடந்த காலத்திலும், கற்பனையிலுமே வாழ்கிறார். அவரது அகராதியில் நிகழ்காலம் என்று ஒன்று இல்லவே இல்லை. கடந்த 11 ஆண்டுகளில், அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் அவர் எவ்வாறு பலப்படுத்தினார் என்பதை அவர் கூறினால் நல்லது. பிரதமரின் பக்தி, நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. நாட்டில் ஜனநாயகம் சர்வாதிகாரமாக மாறக் கூடாது. எமர்ஜென்சி அமல்படுத்தியது தவறு. அந்த தவறு சரி செய்யப்பட்டது. அதன் காரணமாகத்தான், 1980ல் இந்திராகாந்தி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தார். நாங்கள் நாட்டை ஒற்றுமையாக வைத்திருந்தோம். சர்தார் வல்லபாய் படேல் 500 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்தார்.
ஆனால் இப்போது ‘ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்’ எனக் கூறி மத, வகுப்புவாத அடிப்படையில் நாட்டை பிரிக்க முயற்சிக்கிறீர்கள். பாஜவிடம் அமித்ஷா கொண்டு வந்த மிகப்பெரிய வாஷிங்மெஷின் உள்ளது. அது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான தலைவர்கள் பாஜவில் சேர்ந்ததும் அவர்களை அப்பழுக்கற்றவர்களாக்கி விடுகிறது. பல காங்கிரஸ் தலைவர்கள் ஈடி, சிபிஐ மூலம் மிரட்டப்படுகின்றனர். எங்கள் அரசியலமைப்பு அனைவருக்கும் அதிகாரம் அளிக்கிறது. இது சாதி, மதம், பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் யாருக்கும் பாகுபாடு காட்டாது. பாஜதான் இடஒதுக்கீட்டிற்கு எதிரானது. அதனால்தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை எதிர்க்கிறது. இப்போது, அரசியலமைப்பு அச்சுறுத்தலில் உள்ளது. வரும் தலைமுறையினருக்கு அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆளுங்கட்சி தலைவர்கள் தகவல்களை கட் பேஸ்ட் செய்து அவர்களின் வசதிக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு பேசினார்.
The post நேரு குறித்த உண்மைகளை திரித்து கூறிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே விளாசல் appeared first on Dinakaran.