புல்மேடு, எருமேலி வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு உடனடியாக தரிசனம் செய்ய சிறப்பு வசதி: திருவிதாங்கூர் தேவசம் போர்டு தகவல்

திருவனந்தபுரம்: சபரிமலை செல்லும் பெரும்பாலான பக்தர்கள் பம்பை- சன்னிதானம் பாதையைத் தான் பயன்படுத்துகின்றனர். பம்பை வரை வாகனத்தில் சென்ற பின்னர் அங்கிருந்து சுமார் 5 கிமீ மலையேறி செல்ல வேண்டும். இது தவிர வண்டிப்பெரியாரில் இருந்து பக்தர்கள் புல்மேடு வழியாக நடந்து சன்னிதானம் செல்கின்றனர். இந்தப் பாதையில் 15 கிமீ நடக்க வேண்டும். இது தவிர எருமேலியிலிருந்தும் சன்னிதானத்திற்கு பக்தர்கள் நடந்து செல்கின்றனர். 50 கிமீ தொலைவுள்ள இந்தப் பாதை பெரிய பாதை என்று அழைக்கப்படுகிறது.

இந்த இரு பாதைகளிலும் செல்லும் பக்தர்கள் நீண்ட தூரம் நடப்பதால் களைப்படைந்து விடுகின்றனர். எனவே இவ்வாறு வருபவர்களுக்கு உடனடியாக தரிசனம் செய்ய சிறப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஏற்றுக் கொண்டுள்ளது. புல்மேடு மற்றும் எருமேலி பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு சன்னிதானத்தில் சிறப்பு வரிசை விரைவில் ஏற்படுத்தப்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

The post புல்மேடு, எருமேலி வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு உடனடியாக தரிசனம் செய்ய சிறப்பு வசதி: திருவிதாங்கூர் தேவசம் போர்டு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: