திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி: மக்களவையில் துரை வைகோ வலியுறுத்தல்

புதுடெல்லி: மக்களவையில் திருச்சி தொகுதி எம்.பி துரைவைகோ பேசியதாவது: 14 இலட்சம் எல்ஐசி முகவர்களின் கோரிக்கையின்படி, முதலாமாண்டு கமிஷன் தொகை குறைக்கப்படக்கூடாது. மேலும் மொத்த கமிஷனை அதிகரிக்க வேண்டும். பாலிஸி எடுப்பதற்கான வயது வரம்பை 60 வயதாக உயர்த்த வேண்டும். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ₹1 இலட்சத்தில் இருந்து ₹2 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதை கைவிட வேண்டும்.  ஒன்றிய அரசு திருச்சியில் மெட்ரோ இரயில் சேவைக்கு அனுமதியளித்து, அதற்குரிய நிதியை ஒதுக்கித்தந்து, பணிகளை தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

குடிநீரில் புளோரைடு மாசு: மாநிலங்களவையில் திமுக எம்.பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்வியில், “ஜல் ஜீவன் மிஷனின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதில் ஒன்றிய அரசு என்ன செய்துள்ளது. சில பகுதிகளில் குடிநீரில் புளோரைடு மாசுபடுகிறது. அதனை நிவர்த்தி செய்யவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேட்டிருந்தார். அதற்கு ஒன்றிய இணை அமைச்சர் வி.சோமண்ணா அளித்த பதிலில்,” பாதுகாப்பான மற்றும் குடிநீர் குழாய் நீர் விநியோகத்தை ஏற்பாடு செய்ய ஒன்றிய அரசு உறுதியாக உள்ளது. புளோரைடு உள்ளிட்ட ரசாயன மாசுக்களால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு 10சதவீதம் வெயிட்டேஜ் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

The post திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி: மக்களவையில் துரை வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: