கெங்கவல்லி, டிச.16: கெங்கவல்லி பேரூராட்சிக்குட்பட்ட 14, 15வது வார்டுகளில் உள்ளய தெற்குகாடு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுவேத நதிக்கரையில் சுமார் 3000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், பொதுமக்கள் சுவேத நதிக்கரை தர்மராஜர் கோயில் அக்கறை செல்வதற்கு, சுவேத நதிக்கரை குறுக்கே கடந்து தான் செல்ல வேண்டும். இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கனமழை எதிரொலியாக சுவேத நதிக்கரை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அக்கறையில் உள்ள பொதுமக்கள் கிராமத்துக்கு செல்ல முடியாமல் 10 கி.மீ வலசக்கல்பட்டி செல்லம் மேம்பாலம் வழியாக சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால் சுவேத நதிக்கரை குறுக்கே விவசாயிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் ₹4.10 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிக சிமெண்ட் உருளை வைத்து தரைப்பாலம் அமைத்து சென்று வந்தனர். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெய்த கனமழையில், சுவேத நதிக்கரையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் அமைத்து செல்லப்பட்டது. இதனால் சுவேத நதிக்கரையை கடக்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். பொதுமக்கள் ஆபத்தையும் உணராமல் உயிரை பணயம் வைத்து ஆற்றை கடந்து செல்கின்றனர். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, மக்கள் நடந்து செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பாலத்தை ஆபத்தான முறையில் கடக்கும் மக்கள் appeared first on Dinakaran.