கடமலை -மயிலை ஒன்றியத்தில் மானாவாரி நிலங்களில் பருத்தி சாகுபடி தீவிரம்

வருசநாடு, டிச. 16: கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமனூர், எட்டப்பராஜபுரம், கணேசபுரம், அண்ணாநகர், துரைச்சாமிபுரம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, நரியூத்து, மூலக்கடை, வருசநாடு, தும்மக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் மானாவாரி நிலங்களில் பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கடமலைக்குண்டு வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு விவசாய நிலங்களுக்குச் சென்று விவசாய பயிர்களுக்கு தேவையான அனைத்து உதவி உபகரணம் பொருட்களையும் கொடுத்து வருகின்றனர்.

மேலும் பருத்தி சாகுபடி பற்றி ஒவ்வொரு விவசாயிகளிடம் நேரடியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதுபற்றி கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருத்தி விவசாயம் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது முதற்கட்ட பணியாக பருத்தி அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் கடமலை மயிலை ஒன்றியத்தில் சூறைக்காற்று அதிக அளவில் ஏற்படுத்தி வருகிறது. இதனால் சில இடங்களில் பருத்தி செடிகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளது. மேலும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post கடமலை -மயிலை ஒன்றியத்தில் மானாவாரி நிலங்களில் பருத்தி சாகுபடி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: