சிவகங்கை மாவட்ட ‘லோக் அதாலத்’தில் ரூ.5.73 கோடிக்கு தீர்வு

சிவகங்கை, டிச. 16: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்பேரில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 13 மக்கள் நீதிமன்றம் (லோக் அதாளத்) அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில் 1,203 குற்ற வழக்குகள், 137 செக் மோசடி வழக்குகள், 696 வங்கிக்கடன் வழக்கு, 395 வாகன விபத்து நஷ்டஈடு வழக்கு, 232 குடும்ப பிரச்னை வழக்கு, 546 சிவில் வழக்கு என மொத்தம் 3,209 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டன.

இதில் 1,018 வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.4 கோடியே 30 லட்சத்து 80 ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத 1,319 வழக்குகள் எடுக்கப்பட்டு 131 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.1 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது. சிவகங்கை முதன்மை மாவட்ட நீதிபதி கோகுல்முருகன், குடும்பநல நீதிபதி முத்துக்குமரன், தலைமை நீதித்துறை நடுவர் பசும்பொன்சண்முகையா, நீதிபதிகள் செந்தில்முரளி, பாண்டி, சுப்பையா, செல்வம், தங்கமணி மற்றும் வழக்கறிஞர்கள் வழக்குகளை விசாரித்தனர். தன்னார்வ சட்டப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

The post சிவகங்கை மாவட்ட ‘லோக் அதாலத்’தில் ரூ.5.73 கோடிக்கு தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: