ஆய்வின் போது மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தென்பெண்ணை ஆறு, மலட்டாறு, கோரையாறு, கெடிலம் ஆறு மற்றும் நந்தன் வாய்க்கால் சேதங்களை விரிவாக ஆய்வு செய்தார். குறிப்பாக, எல்லிஸ் அணைக்கட்டு, சொர்ணாவூர் அணைக்கட்டு, திருக்கோவிலூர் அணைக்கட்டு மற்றும் தளவானூர் அணைக்கட்டு சேதங்களையும் அவற்றின் புனரமைப்பு தொடர்பான விவரங்களையும் தனித்தனியே கேட்டறிந்தார். நீர் நிலைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தினார். மேலும் சென்னை மாநகர குடிநீர் ஆதாரங்களான பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் போன்ற ஏரிகளின் நீர் வரத்து, நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார். மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள நீர் ஆதாரங்களை கவனமுடன் கண்காணிக்கவும் அறிவுறுத்தினார்.
The post ஃபெஞ்சல் புயலினால் பாசன கட்டுமானங்களில் ஏற்பட்ட பாதிப்புகள், புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் துரை முருகன் ஆய்வு appeared first on Dinakaran.
