உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் வரும் 18ம் தேதி நடக்கிறது கலெக்டர் தகவல் வேலூர் வட்டத்தில்

வேலூர், டிச. 13: மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் வேலூர் வட்டத்தில் வரும் 18ம் தேதி புதன்கிழமை அன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. அச்சமயம் கலெக்டர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் இவ்வட்டத்திற்குட்பட்ட அரசு திட்டப்பணிகள், அரசு சேவைகள், அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு விடுதிகள், நியாய விலைக் கடைகள், பள்ளிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். எனவே, மேற்படி சிறப்பான திட்டத்தில் பொதுமக்கள் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை வேலூர் அடுத்த சோழவரம் கிராமம், ஏ.ஏ. திருமண மண்டபத்தில் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

The post உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் வரும் 18ம் தேதி நடக்கிறது கலெக்டர் தகவல் வேலூர் வட்டத்தில் appeared first on Dinakaran.

Related Stories: