கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

கரூர், டிச. 12: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் காமராஜ் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட உதவி செயலளர் கார்த்திக்கேயன், ஆர்ப்பாட்டம் குறித்து பேசினார். கிளைத்துணைத்தலைவர் குமரவேல் நன்றி கூறினார். ஒத்துக் கொண்ட பிரச்னைகளை முறையாக தீர்த்து வைக்க வேண்டும். நலிந்து வரும் பிஎஸ்என்எல் சேவைகளை சீர்படுத்த வேண்டும். அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: