கலெக்டர் அலுவலகத்தில் சிறுதானிய உணவு கண்காட்சி

 

திருப்பூர், டிச. 12: சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, சத்துணவு திட்டம் சார்பில் சிறுதானிய விழா மற்றும் கண்காட்சி, சமையல் போட்டி ஆகியவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை மகளிர் திட்ட இயக்குனர் சாம் சாந்தகுமார் தொடங்கி வைத்தார். இதில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 13 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் திருப்பூர் மாநகராட்சியை சேர்ந்த 130 சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்ட சிறுதானிய உணவு வகைகளை தயார் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர். இதில், சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்தும், அதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள் குறித்தும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. இதில், பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

The post கலெக்டர் அலுவலகத்தில் சிறுதானிய உணவு கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: