இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள் மட்டுமின்றி, அண்டை மாநில தொழிலாளர்களும் சீசனுக்கு ஏற்றார்போல் இங்கு பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெள்ளிமலையில் இரும்பு பட்டறை அமைத்து கத்தி, அருவா, கொடுவா, கோடாரி உள்ளிட்ட வீடு மற்றும் விவசாயத்துக்கு தேவையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதில் சிலர் இரும்பு பொருட்களை கொடுத்தால் அவற்றை நெருப்பில் காட்டி, அங்கேயே அடித்து புதிதாக வடிவமைத்து கொடுக்கின்றனர். ஒரு கொடுவா கத்தி விலை 200 ரூபாயில் இருந்து 600 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதேபோல் கோடாரி ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுமட்டுமின்றி விவசாயிகள் தங்களிடம் இருக்கும் இரும்பு பொருட்களைக்கொண்டு வந்து கொடுத்து தேவையான பொருட்களை புதிதாக வடிவமைத்து வாங்கி செல்கின்றனர். இவர்களிடம் தரமாக கத்தி, கொடுவா உள்ளிட்டவை கிடைப்பதாக கூறி சிலர் வாங்கி செல்கின்றனர்.
The post கல்வராயன்மலை வெள்ளிமலையில் கத்தி, கோடாரி பொருட்கள் விற்பனை செய்வதில் ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள் ஆர்வம் appeared first on Dinakaran.