கையால் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் (எஸ்.ஆர்.எம்.எஸ்) கீழ் பல்வேறு பயன்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அனைத்து மாவட்டங்களையும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணியிலிருந்து விடுபட்டதாக அறிவித்துக் கொள்ளுமாறும் அல்லது சுகாதாரமற்ற கழிப்பறைகள் மற்றும் கையால் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் விவரங்களை “தூய்மை இயக்கம்” கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இருப்பினும், இதுவரை செயலியில் நம்பகமான தரவு எதுவும் பதிவேற்றப்படவில்லை.
இந்நிலையில், பல்ராம் சிங் என்பவரால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எண் டபிள்யூபி (சிவில்) 324/2020, 20.10.2023 மற்றும் 11.12.2024 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்ட ஆணைகளின்படி, தாம்பரம் மாநகராட்சியில் மனிதக்கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் பணியினை மேற்கொள்ளும் நபர்களை கணக்கெடுப்பு செய்யப்பட்டதில் எவரும் கண்டறியப்படவில்லை. இதில் ஏதேனும் ஆட்சேபனையிருப்பின், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம், 2013 பிரிவு எண்-11ன் படி தங்களது ஆட்சேபனைகளை 15 நாட்களுக்குள் தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு எழுத்து மூலமாக தெரிவித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post மனிதக்கழிவு அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தவில்லை: ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.