சென்னை: அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார். நெல்லை நீதிமன்றம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 23ம் தேதிக்குள் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.