குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆரஞ்சு, பட்டர் புரூட் நாற்றுகள் விற்பனைக்கு தயார்: தோட்டக்கலைத்துறை தகவல்

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆரஞ்சு பழ நாற்றுகளும், பட்டார் புரூட் நாற்றுகளும் விற்பனைக்கு தயாராக உள்ளதாக தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்த நாள் விழா, காதணி விழா, குழந்தைக்கு பெயர் சூட்டு விழா, சீமந்தம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளில், தாம்பூலத்தில் மரக்கன்றுகள் வழங்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.

இதனிடையே நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள சிம்ஸ் பூங்கா நர்சரியில் வீட்டு தோட்டங்களிலும், வீட்டு வாசலில் வளர்ப்பதற்கான அழகிய பூச்செடிகள், பழச்செடிகள், மூலிகை செடிகள், நிழல் தரும் மரக்கன்றுகள் என, பல்வேறு வகையான செடிகள் வழங்கப்படுகின்றன.

இதனை ஊக்குவிக்கும் விதமாக அரசு தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான காட்டேரி பூங்கா, சிம்ஸ் பூங்கா, பர்லியார் பண்னை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கன்றுகள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக, பல்வேறு வகையான மரக்கன்றுகள் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

எனினும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் பூமியில் உள்ள ஈரப்பதம் காரணமாக மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு ஏதுவான தருணமாக உள்ளது. குறிப்பாக ஆரஞ்சு பழ நாற்றுகளும், பட்டர் புரூட் நாற்றுகளும் தற்போது விற்பனைக்கு தாயாராக உள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் குறைந்த விலையில் மரக்கன்றுகளை வாங்கி பயன்பெறலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மேலாளர் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், மரநாற்றுகள், செடிகள் போன்றவைகள் மட்டுமல்லாமல் தோட்டக்கலை பயிர் சாகுபடியை ஊக்குவிக்க பழ மற்றும் காய்கறி பயிர்களின் நடவுப்பொருட்கள் குறைந்த விலையில் அதிக மகசூல் தரும் தோட்டக்கலை பயிர் ரகங்களை உரிய பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்’’ என தெரிவித்தார்.

The post குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆரஞ்சு, பட்டர் புரூட் நாற்றுகள் விற்பனைக்கு தயார்: தோட்டக்கலைத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: