கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தடுப்பு சுவரில் மோதி ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு: 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தடுப்பு சுவரில் மோதி ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 57 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து கவிழந்தது. படுகாயம் அடைந்த 30 பயணிகள் பெரம்பலூர், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் மாலை, இரவு நேரங்களில் தனியார் ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று தனியார் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது.

கன்னியாகுமரி செல்வதற்காக கடலூரில் ராமநத்தம் வழியாக இன்று அதிகாலையில், சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 54 பயணிகளுடன் கூடிய ஆம்னி பேருந்து, வெங்கனூர் ஓடை பாலத்தின் சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. தொடர்ந்து, கவிழ்ந்த பேருந்தின் மீது அவ்வழியே வந்த லாரி மோதியது.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது; மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.

The post கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தடுப்பு சுவரில் மோதி ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு: 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: