5 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் கடல் பயணம்


ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் 5 நாட்களுக்கு பிறகு நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வங்கக்கடலில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கையால், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. 5 நாட்களுக்குப் பிறகு நேற்று தடை நீங்கியதால் மீன்வளத் துறையினர் மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கினர்.

நேற்று காலையில் 479 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று ஐஸ், டீசல் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை ஏற்றிக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் மீன்பிடி துறைமுகம் பரபரப்பாக காணப்பட்டது. பாக்ஜலசந்தி கடலில் இரவு முழுவதும் மீன்பிடிக்கும் மீனவர்கள் அனைவரும் இன்று காலை கரை திரும்புவார்கள். இதுபோல் மண்டபம் பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் 5 நாட்களுக்குப் பிறகு நேற்று, மண்டபம் கோவில்வாடி, வடக்கு கடற்கரை மற்றும் துறைமுக கடற்கரை பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.

The post 5 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் கடல் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: