நாமக்கல், டிச.11: நாமக்கல்லில், உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா, நியூ லைப் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்றது. தொழில்அதிபர் சத்தியமூர்த்தி தலைமை வகித்து பேசினார். தெற்கு நகர திமுக செயலாளர் ராணா.ஆனந்த் கலந்து கொண்டு, மாற்றத்திறனாளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பேசினார். நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர்கள் பிரபாகரன், கேசவன் டாக்டர் நிவேதா லாவண்யா, நல்லுசாமி, மனோகரன், வீனஸ் சசிகுமார், கடல்அரசன் கார்த்தி, பூபதி மற்றும் நிறுவன இயக்குநர் பாக்யலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
The post மாற்றுத்திறனாளிகள் தினவிழா appeared first on Dinakaran.