பூந்தமல்லி: பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிக்காக வைத்திருந்த மின்சார பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லியில் இருந்து மெரினா கலங்கரை விளக்கம் வரை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி, அம்மன் கோயில் தெருவில் மின் பெட்டி ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. இந்த மின்சார பெட்டி நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. வயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பொறி பறந்தது. தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து, மின் பெட்டியில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியாததால், பூந்தமல்லி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள், மின் பெட்டியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அதற்குள் மின் பெட்டி முழுவதும் எரிந்து சேதமானது.
The post மெட்ரோ ரயில் பணிக்கான மின் பெட்டியில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.