பொன்னேரி: பொன்னேரி அடுத்த பழவேற்காடு அடுத்த பசியாவரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் தமது கூட்டாளி மூர்த்தி என்பவருடன் நேற்று காலை அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். முகத்துவாரத்தில் சென்றபோது கடல் சீற்றத்தில் அலையில் சிக்கி படகு கவிழ்ந்துள்ளது. இதில் படகில் மீன் பிடிக்கச் சென்ற சதீஷ்குமார், மூர்த்தி ஆகிய இருவரும் கடலில் விழுந்தனர். தொடர்ந்து சக மீனவர்கள் உதவியுடன் இருவரும் தங்களது படகை மீட்டு கரை திரும்பினர். படகு கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர் தப்பிய நிலையில் படகில் வைத்திருந்த மீன்பிடி வலைகள், வாக்கி டாக்கி இயந்திரம் ஆகியவை கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த சம்பவம் பழவேற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post பழவேற்காடு முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.