தவறி விழுந்து உயிரிழந்த பெயின்டர் உடலை வாங்க பெற்றோர், உறவினர் மறுப்பு: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க கோரிக்கை

மாதவரம்: கொளத்தூர் சிவகாமி நகர் பகுதியை சேர்ந்தவர் சசிரேகா(44). இவர் கொடுங்கையூர் ஆர்.வி நகர் 4வது தெருவில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதற்கு பெயின்ட் அடிப்பதற்காக ஆன்லைன் மூலம், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அவியம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்(27), செஞ்சி மணம்மூடி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி(38) ஆகியோரை புக் செய்தார். இவர்கள் கடந்த 10 நாட்களாக சசிரேகாவிற்கு சொந்தமான வீட்டில் தங்கி பெயின்ட் அடுத்து வருகின்றனர். மூர்த்தி மேற்பார்வையாளராகவும், சுந்தர் பெயின்ட் அடிக்கும் வேலைகளையும் செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், 17ம் தேதி மாலை 4 மணியளவில் சுந்தர் தேங்காய் பறிப்பதற்காக மரம் ஏறிய போது கால் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார். கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சுந்தரின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் அவர்களது உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க போலீசார் முயன்றனர். ஆனால் சுந்தரின் தந்தை ஐயப்பன் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, அவரின் இறப்பிற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அப்போதுதான் உடலை பெற்றுக் கொள்வோம் என கூறினர். இதையடுத்து கொடுங்கையூர் போலீசார் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

The post தவறி விழுந்து உயிரிழந்த பெயின்டர் உடலை வாங்க பெற்றோர், உறவினர் மறுப்பு: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: