துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்

திருவள்ளூர்: திருமழிசை பேரூர் திமுக சார்பில் துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார். திருமழிசை பேரூர் திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொது கூட்டம் மற்றும் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடந்தது. இதில் பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி ஏற்பாடு செய்து தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ், பேரூராட்சி தலைவர் ஜெ.மகாதேவன், பேரூர் நிர்வாகிகள் தி.கோ.செல்வம், வேந்தன், சங்கர், சண்முகம், பன்னீர்செல்வம், பார்த்திபன், வேலு, இளங்கோவன், கங்காதரன், ரேவதி, தாமோதரன், அன்பு, நாகராஜ், திவ்யா, ஆனந்தராஜ், ராஜா முன்னிலை வகித்தனர்.

மேலும், மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர், ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகளையும், மகளிருக்கு நலதிட்ட உதவிகளையும் வழங்கினர்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் காயத்ரி ஸ்ரீதரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கஸ்த்தூரி அருள், அனிதா சங்கர், ஜீவா சதிஷ், விஜயலட்சுமி வேலு, டி.சி.வேலு, வார்டு செயலாளர்கள் கே.வேலு, வெங்கடேசன், தென்னரசு, தாமோதரன், ரகு, ஜான்மேத்யூ, ஹரிகிருஷ்ணன், திருநாவுக்கரசு, அப்பு, பாலமுருகன் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: