இதில் ஒன்றிய செயலாளர்கள் கூளூர் ராஜேந்திரன், ச.மகாலிங்கம், மோ.ரமேஷ், கே.அரிகிருஷ்ணன், வி.ஜெ.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் ப.சிட்டிபாபு, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் ம.கிரண், தா.மோதிலால், டி.கே.பாபு, டி.ஆர்.திலீபன், வி.எஸ்.நேதாஜி, சரஸ்வதி சந்திரசேகர், சி.சு.விஜயகுமார், நகர நிர்வாகிகள் தி.ஆ.கமலக்கண்ணன், டி.எம்.ரவி, எம்.பரசுராமன், எஸ்.டி.பி.சம்பத் ராஜா, டி.என்.ஆர்.சீனிவாசன், டி.சிவக்குமார் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பிறகு அமித்ஷாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
புழல்: சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகில் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். அண்ணல் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்த பிறகு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் ராமகிருஷ்ணன், பகுதி ஒன்றிய செயலாளர்கள் புழல் நாராயணன், மாதவரம் துக்காராம் வடகரை அற்புதராஜ், சோழவரம் கருணாகரன், வில்லிவாக்கம் தயாளன், மாதவரம் மண்டல கோயில் தலைவர் நந்தகுமார், புழல் ஒன்றிய குழு தலைவர் தங்கமணி திருமால், பொதுக்குழு உறுப்பினர் ஜெய் மதன், செங்குன்றம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.டி.குமார், துணை அமைப்பாளர் திராவிட மணி, முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல், வடசென்னை வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகளின் கட்சி சார்பில், செங்குன்றம் அம்பேத்கர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் மாதவரம் சா.இளங்கோவன் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் புழல் கா.கு.தாஸ், சோழவரம் காந்தி, வில்லிவாக்கம் ஆசிர்வாதம், செங்குன்றம் அரிகிருஷ்ணன், புழல் தமிழ்ச்செல்வன், மணலி விஜயன் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நகர ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களில் அசம்பாவங்கள் நடக்காமல் இருக்க செங்குன்றம் போலீசார் ஏராளமான குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் ஜி.என்.டி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியபாளையம்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே, ஒன்றிய செயலாளர்கள் பி.ஜெ.மூர்த்தி, ஆ.சத்திய வேலு ஆகியோர் தலைமையில் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், அவைத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் சம்பத், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயலலிதா சசிதரன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தனசேகரன், மாவட்ட ஓட்டுனர் அணி அமைப்புசாரா துணை அமைப்பாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், பெரியபாளையம் அடுத்த ஆரணி தேரூர் திமுக சார்பில், பேரறிஞர் அண்ணா சிலை அருகே பேரூர் செயலாளர் முத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள், பொருளாளர் கரிகாலன், குருவப்பா, ரஹ்மான் கான், நீலகண்டன், உதயகுமார், மகேந்திரன் ஆகியோர் உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, சீத்தஞ்சேரி கிராமத்தில் உள்ள மும்முனை சந்திப்பில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து பூண்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஒன்றிய செயலாளர் ஜான் பொன்னுசாமி தலைமை தாங்கினார்.
திமுக கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி கருப்பு சட்டை, பேட்ஜ் அணிந்தும், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஒன்றிய அவைத்தலைவர் ராகவன், சிவய்யா, நம்பாக்கம் வேணு, துணைச்செயலாளர் வேல்முருகன், மாவட்ட பிரதிநிதி நாகராஜ், குருமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல், பூண்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பில், கச்சூர் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் தலைமையில், வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான் பொன்னுசாமி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், திமுக நிர்வாகிகள் மாவட்ட கவுன்சிலர் சுதாகர், சிவய்யா, ஊராட்சி தலைவர் சரசுபூபாலன், டார்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post மாவட்டம் முழுவதும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.